காவல்நிலைய வளாகத்தில் தீ குளித்து வாலிபர் பலி

தர்மபுரி மாவட்டத்தில் மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், காவல்நிலையத்தில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி மாவட்டத்தில் மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், காவல்நிலையத்தில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 

பென்னாகரம் தாலுகா மஞ்சாரஅள்ளி பஞ்சாயத்து மஞ்சாரபட்டிகாடு கிராமத்தைச் சேர்ந்த மாது என்பவரின் மகன் ஆசைத்தம்பி (36). கடன் தொல்லையால் ஏற்பட்ட கருத்து வேற்பாட்டால் ஆசைத்தம்பியின் மனைவி பழனியம்மாள் பிரிந்து சென்றார். இதனால், தனியாக வாழ்ந்து வந்த அவர், சமீபகாலமாக மனமுடைந்து காணப்பட்டார். 

இதனிடையே, கடன் பிரச்சினை தொடர்பாகவும், மனைவியை சேர்த்து வைக்கக் கோரியும், ஒரு மாதத்திற்கு முன் ஏரியூர் போலீசில் ஆசைத்தம்பி புகார் அளித்துள்ளார். இதற்கு, பேசி தீர்த்துக் கொள்ளலாம் எனக் கூறி போலீசார் அலட்சியம் காட்டியுள்ளனர். இதனால், அதிருப்தியடைந்த அவர், 15 நாட்களுக்கு முன், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றபோது காப்பாற்றப்பட்டார். இந்த நிலையில், நேற்று மாலை, 4:20 மணிக்கு ஏரியூர் காவல்நிலைய வளாகத்திற்கு வந்த ஆசைத்தம்பி, பெட்ரோலை, தன் மீது ஊற்றித் தீ வைத்து கொண்டார். இதில், உடல் முழுவதும் தீ பற்றி, அங்கேயே இறந்தார். அவரைக் காப்பாற்ற போலீசார் முயன்றும் பலனில்லை. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...