டாஸ்மாக் பாரில் மோதல் : காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்

திருப்பூர் மாவட்டத்தில் தாக்குதல் நடத்திய டாஸ்மாக் கடையின் பார் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தாக்குதல் நடத்திய டாஸ்மாக் கடையின் பார் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 



பி.என்.ரோடு, நெசவாளர் காலனி பகுதியில் டாஸ்மாக் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், நேற்று மாலை டாஸ்மாக் பாரில் மது அருந்த சென்றவர்களுக்களுக்கும், பார் ஊழியர்களுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது, இரு தரப்பினரும் மாறி மாறித் தாக்கிக் கொண்டனர். இதில் பாரில் இருந்த நாற்காலி மற்றும் கண்ணாடி கதவுகள் உடைக்கப்பட்டன. மேலும், பார் உரிமையாளர் குட்டி என்பவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்றொரு தரப்பைச் சேர்ந்த இளங்கோ, சிவக்குமார் ஆகியோருக்கு தலையில் காயம் ஏற்பட்டதையடுத்து, இரு தரப்பினரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 



இந்த நிலையில், இளங்கோ, சிவக்குமார் ஆகியோரின் உறவினர்கள், பார் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பி.என். சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடக்கு போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி, சம்பவம் குறித்து இரு தரப்பிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தின் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...