பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் அணையைப் பார்வையிட தீர்மானம் நிறைவேற்றம்

வரும் 7-ந்தேதி பவானிஆற்றின் குறுக்கே கேரள அரசு அணையைக் கட்டிவரும் இடத்தைச் சென்று பார்வையிடுவது என கோவையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கோவை : வரும் 7-ந்தேதி பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணையைக் கட்டிவரும் இடத்தைச் சென்று பார்வையிடுவது என கோவையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



கோவையின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்ந்து வரும் பவானி ஆற்றின் குறுக்கே சோலையூரில் தடுப்பணை கட்டும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக, கோவை மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம், கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளரும், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளருமான கு. இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், தி.மு.க., மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா. கார்த்திக், தி.மு.க., மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில், தி.மு.க., மாவட்ட பொருளாளர் நாச்சிமுத்து, மாநகர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி. மனோகரன், ம.தி.மு.க. மாவட்ட துணை அமைப்பாளர் ராஜீவ்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல தலைவர் சுசி. கலையரசன், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த தங்கராஜ், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஆறுசாமி மற்றும் தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதி தமிழர் பேரவை, ஆம் ஆத்மி கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டிவரும் இடத்தை 7-ந்தேதி அனைத்து கட்சியினர் சென்று பார்வையிடுதல்,  கேரள முதலமைச்சரை சந்தித்து பேசுதல் மற்றும் கோவையில் லட்சக்கணக்கானோரை திரட்டிப் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...