இறந்தவரின் உடலைப் புதைக்க எடுத்துச்செல்லும் பாதை மறிப்பு : இருதரப்பினரிடையே வாக்குவாதம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இறந்தவரின் உடலைப் புதைக்க சுடுகாட்டுக்கு செல்லும் வழியை, அதன் உரிமையாளர் மறித்ததால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இறந்தவரின் உடலைப் புதைக்க சுடுகாட்டுக்கு செல்லும் வழியை, அதன் உரிமையாளர் மறித்ததால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

பல்லடத்தை அடுத்த மாதப்பூர் பகுதியில் உள்ளது ஏ.டி.காலனி. இப்பகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு இறப்பவர்களைக் கடந்த பல வருடங்களாக தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் புதைத்து வந்தனர். இந்த சூழ்நிலையில், ஏ.டி. காலனி பகுதியைச் சேர்ந்த சின்னப்பட்டான் என்பவர் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்க காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். அப்போது, தோட்டத்தின் உரிமையாளர் வழியை மறித்து, இனி இந்த வழியை உபயோகப்படுத்தக் கூடாது என்றும், சடலத்தை புதைக்கவும் கூடாது எனவும் தெரிவித்தனர். மேலும், இந்த இடத்திற்கு பட்டா பெற்றிருப்பதாகக் கூறிய அவர், சடலத்தைக் கொண்டு செல்லவும் மறுத்து விட்டார். 



இதனால், ஆத்திரமடைந்த காலனி வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீஸார், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், பல காலமாக பயன்படுத்தி வந்த இடத்தை தான் நாங்கள் உபயோகப்படுத்துவோம் எனக் கூறி போலீஸாரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றம் நிலவியது. அதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பல்லடம் டி.எஸ்.பி., முத்துச்சாமி, பல்லடம் தாசில்தார் அருணா மற்றும் அரசு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நீங்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தாலும், இடத்திற்கு உரிமையானவர்கள் பட்டா எடுத்துள்ளதால், அந்த இடத்தை நீங்கள் பயன்படுத்த முடியாது எனக் கூறினர். மேலும், உடல்களை புதைக்க வேறு இடம் ஒதுக்கித் தருவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட ஏ.டி. காலனி பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...