வனவிலங்குகளை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மனிதசங்கிலி

கோவையில் வனஉயிரின பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, வனவிலங்குகள் வாகனங்களில் மோதி உயிரிழப்பதைத் தடுக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மனிதசங்கிலி நடத்தப்பட்டது.

கோவை : கோவையில் வனஉயிரின பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, வனவிலங்குகள் வாகனங்களில் மோதி உயிரிழப்பதைத் தடுக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மனிதசங்கிலி நடத்தப்பட்டது. 

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி மற்றும் உதகை செல்லும் மலைச் சாலைகளில் வாகனம் மோதி மான், குரங்கு காட்டெருமை போன்ற வன உயிரினங்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் இவ்வழியே செல்லும் சுற்றுலா பயணிகள் வனச்சாலை ஓரங்களில் உணவுப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி எறிவதே ஆகும். மேலும், சிலர் சாலை ஓரங்களில் நிற்கும் குரங்குகள் மற்றும் மான்களுக்கு தங்களிடம் உள்ள உணவு பொருட்களை கொடுப்பதால் இப்பகுதி சாலைகளில் விலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. 

பயணிகள் வீசும் வீணான உணவு பொருட்களை உண்ணும் நோக்கத்தோடு சாலையில் திரியும் இதுபோன்ற விலங்குகள் வாகனம் மோதி உயிரிழப்பது அடிக்கடி நடந்து வரும் நிகழ்வாகி மாறி வருகின்றது. இதனைத் தடுக்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு வனத்துறை மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் இணைந்து வன உயிரின பாதுகாப்பு நாளான இன்று பொதுமக்களிடம் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மனித சங்கிலி நடத்தினர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் சாலையில் கல்லார் பகுதியில் சாலையின் ஓரத்தில் ஏராளமானோர் விழிப்புணர்வு மனித சங்கிலியில் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி அவ்வழியே செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நின்றனர். பின்னர், அவ்வழியே செல்லும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். சாலை ஓர விலங்குகளுக்கு உணவு கொடுப்பதும், வனப்பகுதியை ஒட்டி வாகனங்களை நிறுத்துவதும் வனசட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை வனத்துறையினரும் அறிவுறுத்தினர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வனத்துறையினர் மற்றும் வன உயிரின ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...