அனுமதியின்றி மரங்கள் வெட்ட முயற்சி: தடுத்து நிறுத்திய இயற்கை ஆர்வலர்கள்

மேட்டுப்பாளையத்தில் சாலையோரம் உள்ள பழமையான மரங்களை உரிய அனுமதி இல்லாமல் வெட்ட முயன்ற கும்பலை இயற்கை ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தினர்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் சாலையோரம் உள்ள பழமையான மரங்களை உரிய அனுமதி இல்லாமல் வெட்ட முயன்ற கும்பலை இயற்கை ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தினர்.

மேட்டுப்பாளையம் சாலையின் இரு புறங்களிலும் சுமார் 50 ஆண்டுகள் வரை பழமையான வேம்பு மற்றும் புளியன் வகையை சேர்ந்த பழமையான ராட்சத மரங்கள் இருக்கின்றன.

நேற்று மாலை உரிய அனுமதி இன்றி சிலர் சாலை ஓரத்தில் இருந்த மூன்று வேம்பு மரங்களை வெட்டுவதை கண்டு இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.



தொடர்ந்து, பொதுமக்கள் உதவியுடன் அதனை தடுத்து நிறுத்தினர்.

மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தியதில், மூன்று மாதங்களுக்கு முன் ஓடந்துரை பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக வழங்கபட்ட அனுமதி கடிதத்தை தவறாக பயன்படுத்தி பழமையான மரத்தை வெட்ட முயன்றது தெரியவந்தது.

பின்னர் இது குறித்து வருவாய்துறைக்கு தகவல் அளிக்கபட்டது.

தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வளர்ச்சி பணிகளுக்காக மரங்களை வெட்டாமல் வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நட அரசு உத்தரவிட்டு வரும் நிலையில், பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் பழமையான மரங்களை வெட்டி கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...