சென்னை அப்பல்லோவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்த கமலஹாசன்

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமலஹாசன் இன்று சந்தித்துப் பேசினார்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமலஹாசன் இன்று சந்தித்துப் பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் கேரளாவில் முதலமைச்சராக பினராயி விஜயன் இருந்து வருகிறார். தற்போது 72 வயதான அவர், நேற்று கேரள மாநிலம் அட்டப்பாடிக்கு சென்றார். கடந்த 22-ம் தேதி கொல்லப்பட்ட மது என்ற பழங்குடி இளைஞரின் வீட்டுக்கு அரசு அதிகாரிகளுடன் சென்று ஆறுதல் கூறினார். பின்னர், அங்கு பல்வேறு ஆய்வுகளும் நடத்தினார். இந்த நிலையில், இன்று அதிகாலை 2.20 மணி அளவில் பினராயி விஜயனுக்கு ரத்த அழுத்தம் குறைந்ததாகவும், அதன் காரணமாக சென்னை கொண்டுவரப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுகுறித்த மற்ற விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :- கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வருடாந்திர உடல் பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோதனைகள் முடிந்து அவர் நாளை (மார்ச் 04) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும், அவரைச் சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமலஹாசன் முடிவு செய்தார். இதற்காக முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அனுமதி பெறப்பட்டது. அதன்பின், நடிகர் கமலஹாசன் மருத்துவனைக்கு சென்று முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். நடிகர் கமலஹாசனை முதலமைச்சர் பினராயி விஜயனும், அவரின் மனைவியும் வரவேற்றனர். அதன்பின்னர், பினராயி விஜயனுடன் சிறிது நேரம் பேசிய, கமலஹாசன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

நடிகர் கமல் ஹாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்கப்போவதாக அறிவித்தபோது, அதாவது ஓணம் பண்டிகையின் போது, கேரளா சென்று முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்து பேசினார். அப்போது, நிருபர்களிடம் பேசிய நடிகர் கமலஹாசன், அரசியல் பாடம் கற்க வந்திருக்கிறேன் என்று கூறி தனது அரசியல் நிறம் ஒருபோதும் காவியாக இருக்காது என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...