திருப்பூரில் மானிய விலை ஸ்கூட்டர் வழங்கினர் கால் நடைத்துறை அமைச்சர்

திருப்பூரில் மானிய விலை ஸ்கூட்டரை பொதுமக்களுக்கு வழங்கினார் கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்.

திருப்பூர்: திருப்பூரில் மானிய விலை ஸ்கூட்டரை பொதுமக்களுக்கு வழங்கினார் கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்.

தமிழக அரசு சார்பில் பணிக்கு செல்லும் பெண்களுக்கான இருசக்கர வாகனம் மாநிய விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், திருப்பூர் மாவடடத்தில் மொத்தம் விண்ணப்பித்தவர்களில் 3530 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்க நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.



இதன் முதல் கட்டமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100 பேருக்கு மாநிய விலை இருசக்கர வாகனம் வழங்கும் விழா திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக உள்ளரங்கில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். மேலும், விழாவில் சிறப்புரையாற்றிய ராதாகிருஷ்ணன், "மாவட்டம் முழுவதிலும் 3530 பயனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது. முதற் கட்டமாக இன்று திருப்பூரில் 100 பேருக்கு மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளது." என்றார். 

தொடர்ந்து, மானிய விலையில் வழங்கப்படும் இருசக்கர வாகனத்திற்கு மானியமாக ரூ.25 ஆயிரத்திற்கான காசோலைகள் வழங்கப்படடன. மேலும் மூன்றாண்டுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் இருசக்கர வாகனங்களை விற்கவோ பெயர் மாற்றம் செய்ய முடியாத வகையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வாகனப்பதிவு சான்றில் எச்சரிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



இதனிடையே பயனாளிக்கு இருசக்கர வாகனத்தை வழங்கிய அமைசர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்த போது, " நாட்டில் தமிழகத்தில் தான் இது போன்று மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படுகிறது. மேலும், தமிழக கால்நடை துறை சார்பில் ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசிடம் ரூ.700 கோடி வரை கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. காங்கேயம் இன காளை இனப்பெருக்கத்திற்காக பவானிசாகர் பகுதியில் 120 ஏக்கர் பரப்பளவில் ஆய்வுக்கூடம் அமைக்கப ட்டுள்ளது. இனி வரும் காலங்களில் பயனாளிகளுக்கு வழங்கக்கப்படட வேண்டிய கால்நடைகளை அரசே உற்பத்தி செய்து வழங்க உள்ளது. தற்போது, கால்நடைகளுக்கு கோமாரி வேகமாக பரவி வரும் நிலையில் அரசு சார்பில் கடந்த முன்று நாட்களில் 300 குழுக்கள் அமைக்கப்பட்டு 3 நாட்களில் 5 லட்சம் காளைகளுக்கு தடுப்புஊசி போடப்பட்டுள்ளது." என்றார். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...