கோவை மற்றும் திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 43 சவரன் நகை, பணம் கொள்ளை

கோவை மற்றும் திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 43 சவரன் நகை, ரூ. 2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளது.



கோவை: கோவை மற்றும் திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 43 சவரன் நகை, ரூ. 2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளது. 

சூலூரில் வசித்து வருபவர் ரங்கசாமி. ஓய்வுபெற்ற அரசு ஊழியர். கடந்த வியாழன் அன்று ரங்கசாமி தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கொடுமுடிக்கு சென்றார். இந்நிலையில், நேற்று மாலை வீடு திரும்பிய ரங்கசாமி முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்த போது பீரோ-வில் இருந்த 25 சவரன் நகை, தொலைக்காட்சி பெட்டி மற்றும் மைக்ரோ வேவ் ஓவன் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.



இதையடுத்து ரங்கசாமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மற்றொரு சம்பவம்

திருப்பூர் தாராபுரம் சாலை அமராவதிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருண. டையிங் தொழில் செய்து. நேற்று காலை உறவினர் திருமணத்திற்கு குடும்பத்துடன் சிவன்மலை சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 18 சவரன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். திருமண நிகழ்ச்சி முடிந்து நேற்று மாலை வீடு திரும்பிய அருண் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது இக்கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...