வணிகர்களை மிரட்டி உரிமம் பெற வைக்கின்றனர்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா குற்றச்சாட்டு

தமிழகத்தில் மட்டுமே சிறு வணிகர்களை மிரட்டி உரிமம் பெற வைக்கும் நடைமுறை உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை: தமிழகத்தில் மட்டுமே சிறு வணிகர்களை மிரட்டி உரிமம் பெற வைக்கும் நடைமுறை உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை அவினாசி சாலையிலுள்ள தென்னிந்திய வர்த்தக சபை கூட்டரங்கில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வரும் மே 5-ம் தேதி சென்னையில் நடைபெறும் 35-வது வணிகர் தின மாநாட்டிற்கு கோவையில் இருந்து 500 வாகனங்களில் செல்வது, அத்தியாவசிய பொருட்கள் அனைத்திற்கும் ஜி எஸ் டி யிலிருந்து முழு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பன போன்ற 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில தலைவர் விக்கிரமராஜா, "அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை வணிகர்கள் மீது திணிப்பது கண்டிக்கத்தக்கது. சிறு வணிகர்களை பல இடங்களில் மிரட்டியே உரிமம் பெற வைக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் தான் இந்த நெருக்கடி இருக்கிறது. 



மேலும், கடையில் கரப்பான் பூச்சி இருந்தால் ரூ.5000 அபராதம், எலி இருந்தால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், குடிநீரில் கலப்படம் உள்ளதை யாரும் கண்டுகொள்ளவில்லை.

அதற்காக அந்த அதிகாரிகளையும், துறை அமைச்சரையும் சிறையில் அடைக்கலாமா?. நாங்கள் பொருட்களை வாங்கி விற்பவர்கள் மட்டுமே. உற்பத்தி செய்யக்கூடிய இடத்தில் தான் பிரச்சினை உள்ளது. கலப்பட பொருள் விற்பனை என்ற பெயரில் எங்களைத் தண்டிப்பது தவறு. தமிழக அரசியலில் புதிதாக ஈடுபட்டுள்ள ரஜினியாக இருந்தாலும், கமலாக இருந்தாலும் தமிழகத்தில் உள்ள ஆறுகளை சீர் செய்ய வேண்டும். எந்த அரசாக இருந்தாலும் தமிழக அரசு நதி நீர் விஷயத்தில் நமது உரிமைகளை விட்டுக் கொடுக்க கூடாது. 

அதேபோல், தமிழக அரசு உரிமைகளுக்காக அனைத்துக் கட்சிகளையும் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு எப்போதும் அதற்கு துணை நிற்கும்." என்றார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...