தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக பேணிக்காக்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக பேணிக்காக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக பேணிக்காக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு தொடங்கியது. முதலமைச்சர் தலைமையில், நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10வது தளத்தில் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் சட்டம் ஒழுங்கு, வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.அதேபோல் 32 மாவட்ட ஆட்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர். 

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம், முதலமைச்சர் தலைமையில் ஆட்சியாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாடு நடைபெறுவது வழக்கம். இறுதியாக 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் ஆட்சியாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. அதன்பிறகு கடந்த 4 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் மாநாடு நடைபெறவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலை மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்த மார்ச் மாதம் 5, 6, 7 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் எஸ்.பி.க்கள் மாநாடு நடைபெறும் என்று தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி, இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு தொடங்கியது.

மாநாட்டைத் தொடங்கி வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "தமிழகத்தில் அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் தொடர்ந்து செயல்பட வேண்டும். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் தொடர்ந்து தமிழக அரசை நடத்த உதவிட வேண்டும். தீவிரவாதம், மதவாதம் போன்றவற்றில் இருந்து மக்களைக் காக்க வேண்டும். தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்," என்றார். 

நாளை (மார்ச் 06) மாவட்ட ஆட்சியாளர்களுக்கான கூட்டமும், 7ம் தேதி காவல்துறை அதிகாரிகளுக்கான கூட்டமும் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள முக்கிய பிரச்சனைகள், மக்கள் நல திட்டங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது. 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...