ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது குறித்த பொருட்காட்சி

கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் தொடங்கிய இந்திய ராணுவத்தின் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது குறித்த பொருட்காட்சியை மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

கோவை : கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் தொடங்கிய இந்திய ராணுவத்தின் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது குறித்த பொருட்காட்சியை மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். 

கடந்த மாதம் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை வந்த போது, கோவையில் பாதுகாப்புதுறை சம்பந்தமான ஒரு கண்டுபிடிப்பு மற்றும் அடைகாக்கும் மையத்தை உருவாக்க கொடிசியாவிற்கு ரூ. 20 கோடி வழங்குவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, கோவை பிராந்தியத்தில் உள்ள சிறு, குறு, மத்தியரக தொழில் நிறுவனங்களால் ராணுவ தளவாடங்களில் எந்த வகையிலான பொருட்களை தயார் செய்ய முடியும் என்பதை அறிந்து கொள்வதற்காக பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் நேரடியாக இந்தக் கண்காட்சியில் பங்குபெறும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் இந்திய ராணுவத்தின் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது குறித்த பொருட்காட்சி இன்று தொடங்கியது. நாளை வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் உள்நாட்டிலேயே தயாரிக்கும் ராணுவ தளவாடங்களில் 400-க்கும் மேற்பட்ட பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சியால் சிறு, குறு மற்றும் மத்திய தொழில்துறை நிறுவனங்களால் ராணுவ தளவாடங்களின் பொருட்கள் குறித்த அடிப்படையைத் தெரிந்து கொள்வதோடு, தங்களால் எந்த மாதிரியான பொருட்களை தயாரிக்க முடியும் என்ற தெளிவிற்கும் வர முடியும் என கொடிசியா அமைப்பின் தலைவர் சுந்தரம் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கூறும்போது :- கோவையில் உள்ள தொழில்துறை நிறுவனங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த கண்காட்சியின் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அதீத வளர்ச்சியை எட்ட இந்த கண்காட்சி பெரிதும் உதவும். மேலும், இந்திய அரசாங்கம், சென்னை, திருச்சி, கோவை, சேலம், ஒசூர், பெங்களூர் ஆகிய இடங்களை இணைத்து ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் வழித்தடத்தை உருவாக்க இருப்பதால் சிறு, குறு மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களால் ராணுவத்திற்கு வேண்டிய தளவாடங்களை தயாரிப்பது எளிதாகி உள்ளது. என்றார். 

பெல், இந்திய கப்பற்படை, இராணுவ படை போன்ற பத்துக்கும் மேற்பட்ட பெரும் நிறுவனங்கள் இக்கண்காட்சியில் தங்களுடைய தயாரிப்புகளைக் காட்சிக்கு வைத்துள்ளனர். 30-க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் ஆள் இல்லா விமான மாதிரி, போரின் போது பயன்படுத்தப்படும் விதவிதமான துப்பாக்கி வகைகள், கப்பலுக்கு தேவையான உதிரிப்பாகங்கள், மோட்டார் வகைகள் உள்ளிட்ட வகைகளை கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர். 

கோவையில் முதன் முறையாக நடைபெறும் இக்கண்காட்சியின் மூலம் நமது நாட்டின் வளர்ச்சி பற்றி அதிகளவு தெரிந்து கொண்டதாகவும், ரசியா, அமெரிக்கா நாடுகளுக்கு இணையாக நமது நாடும் உள்ளது என்பதை இக்கண்காட்சி மூலம் அறிந்து கொண்டதாக மாணவர்கள் தெரிவித்தனர். நாளை வரை நடைபெறும் இராணுவ தளவாடங்கள் கண்காட்சியைப் பள்ளி, மாணவர்கள் அதிகளவில் கலந்து கொண்டு நமது நாட்டின் பெருமை, வளர்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என பேராசிரியர்கள் கேட்டுக் கொண்டனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...