ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

திருப்பூர் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



ராயபுரம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பகுதிகளை ஆக்கிரமித்து அப்பகுதியினர் பந்தல்கள் அமைத்தும், சிறு, சிறு கடைகளும் அமைத்திருந்தனர். இந்நிலையில் இன்று அப்பகுதிக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் பந்தல்களை பிரித்து மாநகராட்சி வாகனங்களில் போட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், எந்தவித முன்னறிவிப்புமின்றி மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தங்களது பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ள கால அவகாசம் கோரி மாநகராட்சி அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தற்போதைக்கு அகற்றப்படாது என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...