உலக பணக்காரர்களுக்கான பட்டியலில் அம்பானிக்கு 19-வது இடம்

உலக பணக்காரர்களுக்கான போர்ப்ஸ் பட்டியலில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி 19-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

உலக பணக்காரர்களுக்கான போர்ப்ஸ் பட்டியலில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி 19-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

உலக பணக்காரர்களுக்கான பட்டியலை, போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதில், இந்தியாவிலிருந்து 119 பேரும், அமெரிக்காவிலிருந்து 585 பேரும், சீனாவிலிருந்து 373 பேரும் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இந்தப் பட்டியலில், சர்வதேச அளவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி 40.1 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 19வது இடத்தில் உள்ளார் கடந்த வருடத்தை விட அவரது சொத்து மதிப்பு 16.9 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. சென்ற வருடம் முகேஷ் அம்பானி 33-வது இடத்தில் இருந்தார். 

விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி 18.8 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 58-வது இடத்திலும், எச்.சி.எல். நிறுவனத்தின் சேர்மன் லட்சுமி மிட்டல், 18.5 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 62-வது இடத்திலும், எச்.சி.எல். நிறுவனத்தின் சேர்மன் சிவ நாடார் 14.6 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 98-வது இடத்திலும், சன் பார்மாசிடிகல்ஸ் நிறுவனத்தின் திலிப் சங்வி 12.8 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 115-வது இடத்திலும் உள்ளனர்.

ஆதித்யா பிர்லா நிறுவன தலைவர் குமார் பிர்லா 11.8 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 127-வது இடத்திலும், கோடக் மகிந்திரா வங்கி நிர்வாக இயக்குநர் உதய் கோடாக் 10.7 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 143-வது இடத்திலும், ராதாகிருஷ்ணன் தாமினி 10 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 151-வது இடத்திலும், அதானி நிறுவனத்தின் நிறுவனர் கவுதம் அதானி 9.7 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 154-வது இடத்திலும், பூன்வாலா நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூன்வாலா 9.1 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 170-வது இடத்திலும் உள்ளனர். பதஞ்சலி நிறுவனத்தின் ஆச்சார்யா பாலகிருஷ்ணா 6.3 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 274வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பேஜோஸ் 100 பில்லியன் டாலர் சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...