கர்ப்பிணியை கொன்ற காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

திருச்சியில் கர்ப்பிணிப் பெண்ணை காலால் உதைத்துக் கொன்ற காவல் ஆய்வாளர் காமராஜை பணியிடை நீக்கம் செய்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜு உத்தரவிட்டுள்ளார்.


திருச்சி: திருச்சியில் கர்ப்பிணிப் பெண்ணை காலால் உதைத்துக் கொன்ற காவல் ஆய்வாளர் காமராஜை பணியிடை நீக்கம் செய்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜு உத்தரவிட்டுள்ளார்.



திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கணேசா ரவுண்டானா பகுதியில் திருவெறும்பூர் போலீசார் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த ராஜா - உஷா (3 மாத கார்ப்பிணி) தம்பதியினர் போலீசார் கைகாட்டி நிறுத்தாததால், ஆய்வாளர் காமராஜ் அவர்கள் வாகனத்தை எட்டி உதைத்ததாக தெரிகிறது. 



இதனால், தம்பதியர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். பின்னால் வந்த வேன் ஏறியதில் 3 மாத கர்ப்பிணியான உஷா சம்பவ இடத்திலேயே பலியானார். ராஜா பலத்த காயமடைந்தார்.



இதை கண்டித்து அப்பகுதி மக்கள் 3,000 க்கும் மேற்பட்டோர் நேற்று திருச்சி- தஞ்சை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வாகனத்தை எட்டி உதைத்த ஆய்வாளர் காமராஜ் தப்பியோடிவிட்டார். இந்நிலையில் காமராஜ் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை வரும் 21-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யும் வரை உஷாவின் சடலத்தை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பெண் உயிரிழக்க காரணமான காமராஜை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...