அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து அ.தி.மு.க., உள்பட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து அ.தி.மு.க., உள்பட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், கூட்டத் தொடர் தொடங்கிய நாளில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் இரு அவைகளிலும் பணிகள் முடங்கி உள்ளன. குறிப்பாக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆந்திர எம்.பி.க்களும், பி.என்.பி. மோசடி குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியது. மகளிர் தினத்தை முன்னிட்டு மக்களவையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வாழ்த்து தெரிவித்து தனது உரையைப் படித்தார். அதன்பின்னர், அவை நடவடிக்கை தொடங்குவதாக அறிவித்தார். கேள்வி நேரத்தைத் தொடரும்படி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார் கேட்டுக்கொண்டார். வங்கித்துறை முறைகேடுகள் தொடர்பாக விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

அப்போது, அ.தி.மு.க., தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதன் காரணமாக, முதலில் மதியம் வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னரும், அமளி நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதன்மூலம், நான்காவது நாளாகத் தொடர்ந்து கேள்வி நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாநிலங்களவையிலும் உறுப்பினர்களின் அமளி தொடர்ந்தது. இதனால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...