மனைவியின் புகார் எதிரொலி: ஊதிய ஒப்பந்தப் பட்டியில் ஷமியின் பெயர் நிறுத்தி வைப்பு

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி புகார் கூறியுள்ளதை அடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலில் அவரை சேர்க்காமல் நிறுத்தி வைத்துள்ளது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி புகார் கூறியுள்ளதை அடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலில் அவரை சேர்க்காமல் நிறுத்தி வைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமிக்கும், ஹசின் ஜஹன் என்ற பெண்ணுக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஆயிரா (2½ வயது) என்ற பெண்குழந்தை உள்ளது. களத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களை வேகப்பந்து வீச்சால் மிரட்டி வரும் முகமது ஷமியின் இல்வாழ்க்கையில் திடீரென பெரும் புயல் வீசி இருக்கிறது. முகமது ஷமி குறித்து அவரது மனைவி ஹசின் ஜஹன் ‘பேஸ்புக்’ பக்கத்தில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி இருக்கும் அவர் ஒரு சில பெண்களுடன் ஷமி நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும், அந்தப் பெண்களின் செல்போன் எண்களையும் வெளியிட்டு இருக்கிறார்.

ஹசின் ஜஹன் கொல்கத்தா போலீசில் நேற்று முறைப்படி புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். ஆனால் புகாரில் உள்ள விவரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர். இதனிடையே, தர்மசாலாவில் நடந்து வரும் தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய ‘ஏ’ அணிக்காக விளையாடும் முகமது ஷமி தன் மீதான புகாரை மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறைகேடு நடந்தது என்றால், இப்போது ஏன் வெளியே வந்தது? 'ஐந்து வருடங்கள் ஏன் வெளியே வரவில்லை. இது எனக்கு எதிராக நன்கு திட்டமிட்ட சதி. நான் சாதாரணமாக இருக்க விரும்புகிறேன். ஹோலி மற்றும் ஒவ்வொரு பண்டிகையின் போதும் நான் என் குடும்பத்துடன் இருந்தேன். என் மகள் மற்றும் மனைவியுடன் நேரம் செலவழித்தேன். கடந்த காலங்களில் என் மனைவி குறித்த சர்ச்சை வந்தபோதும் நான் அவரோடு இருந்தேன். நான் இன்றும் அவருடனயே நிற்க விரும்புகிறேன்.

அது என் மொபைல் அல்ல, என் எண் அல்ல, என்னுடைய பேச்சு அல்ல. எனவே, நான் ஒருபோதும் இது போல் செய்யவில்லை. என் குடும்பத்துடன் நான் பகிர்ந்துகொண்ட உறவு அனைவருக்கும் தெரியும், நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தேன். தென்னாப்பிரிக்காவில் கூட என் மனைவியுடன் என் உறவு எப்படி இருந்தது என எல்லோருக்கும் தெரியும். அவர் ஷாப்பிங் செல்ல வேண்டும் என்றார். அந்த சமயத்தில் நான் தேர்வாளர்களுடன் இருந்தபோதும் அவரை அழைத்துச் சென்றேன். எல்லாம் நன்றாக இருந்தது. திரும்பி வந்ததும் நாங்கள் ஷாப்பிங் சென்றோம், நாங்கள் நகைகள் வாங்கினோம். நாங்கள் ஹோலி கொண்டாடினோம். திடீரென்று என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. நான் விரைவில் அதை கண்டுபிடித்து உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்," என்றார்.

இந்த நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹன் பரபரப்பான புகாரை கூறியுள்ளார். ஷமி தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், அவர் பல பெண்களுடன் சகவாசம் வைத்து இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலில் அவரைச் சேர்க்காமல் நிறுத்தி வைத்துள்ளது. விசாரணைக்கு பிறகே அவரை ஒப்பந்தத்தில் சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...