கஞ்சா விற்ற இருவருக்கு 3 மற்றும் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை : கோவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கோவையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதவர்களுக்கு தலா 3 ஆண்டுகளும், காரில் கஞ்சா கடத்தியவருக்கு தலா 10 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை : கோவையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதவர்களுக்கு தலா 3 ஆண்டுகளும், காரில் கஞ்சா கடத்தியவருக்கு தலா 10 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோவை உக்கடம் பைபாஸ் ரோடு ரயில்வே மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்பனை ஜோராக நடப்பதாக உக்கடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு, ஒருசிலர் வாலிபர்கள் பையில் வைத்து கஞ்சாவை விற்பனை செய்து வந்தனர். போலீசார் வருவதையறிந்த அவர்கள், அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். துரத்திச் சென்று போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தவர்களை மடக்கி பிடித்தனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜி.எம். நகரைச் சேர்ந்த ஐயூப் (28), ஹரிதாஸ் (28) மற்றும் மதுக்கரையை சேர்ந்த சாகுல் அமீது (30) என்பது அவர்கள் பெயர் எனத் தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 21 ஆயிரத்து 380 ரொக்கப் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, மூவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை போதைப்பொருள் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி குணசேகரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ஐயூப் மற்றும் ஹரிதாஸ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். சாகுல் அமீது மீதான குற்றம் நிருபிக்கப்படாததால், அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதேபோல, கோவையை அடுத்த பேரூர் வழியாக காரில் 21 கிலோ கஞ்சாவை கடத்தி சென்றதாக தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே பாப்பம்மாள் புரத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகன் மோகன்தாஸ் (30) கைது செய்யப்பட்டார்.  இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மோகன்தாஸை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கஞ்சா கடத்திய குற்றத்திற்காக மோகன்தாசுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...