அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து : 3 பேர் பலத்த காயம்

திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் மினிவேன் உட்பட நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பூர் : திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் மினிவேன் உட்பட நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 



திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து மினிவேனில் அருண்மொழி மற்றும் சிவக்குமார் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். திருச்சியிலிருந்து கோவைக்கு காரில் திருச்சியைச் சேர்ந்த எழிலரசன் என்பவர் வந்து கொண்டிருந்தார். மாதப்பூர் அருகே திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த  கார் எதிரே வந்து கொண்டிருந்த மினிவேனில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மினிவேன் கவிழ்ந்து, பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. 

இந்த விபத்தில், காரில் வந்த எழிலரசன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மினிவேனில் பயணித்த அருண்மொழி மற்றும் சிவக்குமாருக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்துக்குள்ளானதால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...