பல்லடத்தில் 700 ஆண்டுகள் பழமையான கோவிலின் மேற்கூரை இடிந்து விபத்து

பல்லடம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோவிலின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

திருப்பூர்: பல்லடம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோவிலின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்டது அல்லாளபுரம். இங்கு ஸ்ரீ உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. பாண்டியர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. 700 ஆண்டுகள் மிகவும் பழமையான இக்கோவில் தற்போது அறநிலையத்துறை வசம் உள்ளது.



1995-ல் கும்பாபிசேகம் நடத்தப்பட்ட இக்கோவிலில் அதற்கு பிறகு எந்த விதமான விழாக்களும் நடைபெறவில்லை என இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், நீண்ட நாட்களாக பராமரிப்பில் இல்லாத கோவிலின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததது. பக்தர்கள் குறைவான அளவே இருந்த காரணத்தினால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. நீண்ட நாட்களாக மாவட்ட நிர்வாகத்திடமும், இந்து சமய அறநிலைய அதிகாரிகளிடம் இது குறித்து பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



கோவிலுக்குச் சொந்தமாக 450 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் அதனை மீட்டுத்தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...