தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய ஐந்து இடங்கள் தேர்வு - சுகாதார துறை செயலாளர்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் ரூ. 30 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிநவீன கருவிகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.கோவை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

கோவை அரசு மருத்துவமனையில் தமிழக அரசின் சுகாதார துறை சார்பில் இருதயம், சிறுநீரகவியல், நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு கருவிகள், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 30 கோடி வரை நிதி ஒதுக்கபட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் குறித்து தமிழக சுகாதார துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் அம்மருத்துவமனையில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழக அரசு எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தாமதம் காட்டி வருவதாக கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர 700 ஏக்கர் நிலம் இருக்கும் ஐந்து இடங்களைத் தேர்வு செய்து. அதற்கான அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே சமர்ப்பித்துவிட்டோம். தொடர்ந்து, வரும் 13-ம் தேதி நானும், தமிழக சுகாதார துறை அமைச்சரும் மத்திய சுகாதார துறை அமைச்சரை மீண்டும் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.

கோவை அரசு மருத்துவமனையில் உயர் தர மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஜெய்க்கா திட்டத்தின் மூலம் 189 கோடி ரூபாயில் 79 வகையான உயர்தர கருவிகள் வாங்க அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும், ஜப்பான் நாட்டுடன் இணைந்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. புற்றுநோய் சிகிச்சைக்கான மண்டல கேன்சர் மையம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஓரிரு மாதங்களில் செயல்பட துவங்கும். அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது. 

தாய்-சேய் நலத்தில் வளர்ந்த நாடுகளுக்கு இணையான வசதிகளை செய்துள்ளோம். லஞ்ச புகார்கள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையின் தலைவர் அல்லது இருப்பிட மருத்துவ அலுவலரிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இல்லையெனில் 104 என்ற எண்ணிற்கு அழைத்து மருத்துவமனையில் உள்ள குறைகள் தொடர்பாக புகார் அளிக்கலாம்.

ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு மட்டுமே சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்களுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

கடந்த ஆறு ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளில் வரலாறு காணாத அளவில் மாணவர்களுக்கான இடங்கள் அதிகரித்துள்ளது." என்றார்.

கோவை அரசு மருத்துமனையில் ரூ. 30 கோடி ரூபாய் வரையில் தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில் இருதய துறை சிறுநீரகவியல், நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு கருவிகள், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஒதுக்கபட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வைத் தொடர்ந்து, கேத்லேப் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின் போது, டீன் அசோகன், இணை இயக்குனர் சந்திரசேகர், துணை இயக்குனர் பானுமதி, இருப்பிட மருத்துவ அலுவலர் சவுந்தரவேல் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...