ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கு : கார்த்தி சிதம்பரத்திற்கு மேலும் 3 நாள் காவல்

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தின் நீதிமன்ற காவல், மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தின் நீதிமன்ற காவல், மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஐ.என்.எக்ஸ்., மீடியா என்ற நிறுவனம் விதிமுறைகளை மீறி அதிக அளவில் அன்னிய முதலீட்டை பெற்றதாக சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். அப்போதைய, மத்திய நிதியமைச்சரின் சிதம்பரத்தின் மகன் கார்த்தி, நிதியமைச்சக அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, இந்த முறைகேட்டிற்கு உதவியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. 

இது தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதியன்று கார்த்தி சிதம்பரத்தை சென்னை விமான நிலையத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்து டெல்லி அழைத்து சென்றனர். அங்கு நீதிமன்ற உத்தரவுப்படி, அவரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்த சி.பி.ஐ., அதிகாரிகள், தொடர்ந்து, மேலும் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இந்த சி.பி.ஐ., காவல் முடிந்த நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது, விசாரணை முடிவடையாத காரணத்தினால், கார்த்தியை மேலும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என சி.பி.ஐ., அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து, கார்த்தி சிதம்பரத்தை மேலும் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. விசாரணை முடிந்த பின்னர் வரும் திங்கட்கிழமை (மார்ச் 12) பிற்பகல் 12 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர். 

ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை, வரும் 20-ம் தேதி வரை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்ற தடை விதித்துள்ளது. இது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கும், அமலாக்கத்துறைக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...