உதகையில் 122-வது மலர்கண்காட்சி வரும் மே 18-ம் தேதி தொடக்கம்

உதகையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலர் கண்காட்சி வரும் மே 18-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என தோட்டக்கலைத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

உதகை : உதகையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலர் கண்காட்சி வரும் மே 18-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என தோட்டக்கலைத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.  



மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் வெளிநாட்டு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கில் உதகைக்கு வருவது வழக்கம். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளைக் கவர தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக் கண்காட்சி உட்பட பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். 

இந்நிலையில் இந்தாண்டுக்கான கோடை விழாக்கள் குறித்து இன்று உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத்துறை இயக்குநர் சுப்பையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் வரும் மே மாதம் 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 122-வது மலர் கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 26 மற்றும் 27-ம் தேதி 60-வது பழக்கண்காட்சியும் நடக்கிறது. இதேபோல, ரோஜா பூங்காவில் 12,13 ஆகிய தேதிகளில் 16-வது ரோஜா கண்காட்சியும், கோத்தகிரி நேரு பூங்காவில் மே 5,6 ஆகிய தேதிகளில் 10-வது காய்கறி கண்காட்சியும், கூடலூரில் 8-வது வாசனை திராவிய கண்காட்சி மே 11,12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும். இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உடனிருந்தார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...