மேட்டுப்பாளையம் - உதகை மாலைப்பாதையில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய இயற்கை ஆர்வலர்கள்

மேட்டுப்பாளையம் - உதகை மலைப்பாதையில் வீசபட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையினர் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைந்து அப்புறப்படுத்தினர்.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் - உதகை மலைப்பாதையில் வீசபட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையினர் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைந்து அப்புறப்படுத்தினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களும் குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய இரு சாலை மார்க்கமாகவே மலைப்பாதையில் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சாலை மார்க்கமாக செல்லும் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வனச்சாலையை கடந்து செல்லும் போது வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்கின்றனர்.



தற்போது, வறட்சி தொடங்கியுள்ள நிலையில் வனப்பகுதிகள் காய்ந்து வருவதால் வனவிலங்குள் வனத்தினை விட்டு வெளியேறி உணவை தேடி அழையும் நிலையில் உள்ளது. அவ்வாறு வரும் யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் இந்த பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்வதால் வறட்சியில் அவைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு, வனவிலங்குகள் உயிரிழப்பு என்பது தொடர்ந்து கொண்டே வருகிறது. அத்துடன் மது குடிக்கும் சில நபர்கள் வனத்தில் அத்துமீறி நுழைந்து பாட்டில்களை வீசி செல்கின்றனர். இதனால் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள், மது பாட்டில்கள் தேங்கியுள்ளன. 

இந்த நிலையில், இந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பாட்டில்களை இன்று அப்புறப்படுத்தும் பணியில் மேட்டுப்பாளையம் வனத்துறையினர் மற்றும் நமது மேட்டுப்பாளையம் காப்போம், பவானி அறக்கட்டளை மற்றும் மாணவர்கள் ஆகியோர் இணைந்து கோத்தகிரி சாலையில் ஓடந்துறையில் இருந்து முதல் கொண்டை ஊசி வரை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு வனச்சாலையின் இரு புறத்திலும் சிதரிக்கிடந்த பிளாஸ்டிக் கழவுகளை அப்புறபடுத்தினர். சுமார் 3 டன் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மேட்டுப்பாளையம் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் கோடை சீசன் துவங்க உள்ள நிலையில் ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் பிளாஸ்டிக் தவிர்கக வேண்டும் என கேட்டுகொண்ட வனத்துறையினர், வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் வசுலிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.



Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...