விவசாயிகளின் புதிய நண்பனாக ‘மைக்ரோ ஸ்பிரிங்ளர்’

தண்ணீரை மிச்சப்படுத்தும் ‘மைக்ரோ ஸ்பிரிங்ளர்’ எனப்படும் நுண் தெளிப்பான்கள் பயன்பாடு தற்போது நீலகிரி விவசாயிகளிடத்தில் அதிகரித்து வருகிறது.

நீலகிரி : தண்ணீரை மிச்சப்படுத்தும் ‘மைக்ரோ ஸ்பிரிங்ளர்’ எனப்படும் நுண் தெளிப்பான்கள் பயன்பாடு தற்போது நீலகிரி விவசாயிகளிடத்தில் அதிகரித்து வருகிறது. 

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை மற்றும் மலை காய்கறிகள் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுவாக ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். தொடர்ந்து நவம்பர் மாதம் வட கிழக்கு பருவமழை பெய்யும். இதனால், 6 மாதங்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் மழை கிடைக்கும். 

பருவ நிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் காரணத்தினால் சில ஆண்டுகளாக பருவமழை தவறி, குறித்த காலத்தில் பெய்வதில்லை. மேலும், சில நேரங்களில் மழை அதிகமாகப் பெய்கிறது அல்லது பொய்த்து விடுகிறது.  இச்சமயங்களில் நீர் ஆதாரம் உள்ள பகுதிகளில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து அதனை தெளிப்பான்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு பாய்ச்சப்பட்டு வருகிறது. 



குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறி தோட்டங்களுக்கு இம்முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. சாதாரணமாக தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சும் போது, தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் நிலத்திற்குள் செல்லாமல் தாழ்வான பகுதியை நோக்கி ஓடி விடும். இதற்குக் காரணம் பழைய முறையில் இயங்கும் தெளிப்பான்களில் தண்ணீர் பயன்பாடு அதிகரிக்கிறது.

 

நுண் தெளிப்பான்கள்

தண்ணீர் தேவை அதிகரித்து வரும் நிலையில், தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. இதனால், குறைந்த தண்ணீரை பயன்படுத்தும் தொழில்நுட்பம் இன்றைய காலகட்டத்தின் அத்தியாவசியமானது.

இத்தகைய தொழில்நுட்பம் தான் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தும் ‘மைக்ரோ ஸ்பிரிங்களர்கள்’ எனப்படும் நுண் தெளிப்பான்கள். 

இந்த தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. நிலம் நன்கு ஈரமாகவும், தண்ணீர் வழிந்தோடாத வகையில் குறைந்த அளவு தண்ணீர் தெளிக்கும் நுண் தெளிப்பான்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தண்ணீர் பாய்ச்சும் போது, குறைந்த அளவே தண்ணீரே செலவாகிறது. அதே நேரம் தாவரங்களுக்கு தேவையான தண்ணீரும் கிடைக்கிறது. 

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை காலம் தொடங்கவுள்ள காரணமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனை பயன்படுத்தியே விவசாயம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, விவசாயிகள் இந்த நுண் தெளிபான்களைப் பயன்படுத்தி குறைந்த அளவில் கிடைக்கும் தண்ணீரை தங்களது தோட்டத்தில் உள்ள அனைத்து காய்கறி செடிகளுக்கும் பாய்ச்சி வருகின்றனர். இந்த நுண் தெளிப்பான்கள் பயன்படுத்துவதன்  மூலம் தண்ணீர் அதிகளவு மிச்சப்படுத்தப்படுவதாகவும், குறைந்த தண்ணீர் கொண்டு அதிக இடங்களுக்கு நீர் பாய்ச்சப்படுவதால் காய்கறி மகசூலும் கணிசமாக அதிரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

முழு மானியம்

இது தொடர்பாக தோட்டக்கலைதுறை இணை இயக்குநர் சிவசுப்ரமணிய சாம்ராஜ் கூறுகையில், "வேளாண்மையில் தண்ணீர் சேமிப்பை கருத்தில் கொண்டு முன்னோடியாக பல தொழில்நுட்பங்களை புகுத்தியவர்கள் இஸ்ரேலியர்கள். அவர்கள் தண்ணீரை சேமிக்க சொட்டு நீர் பாசனத்தை அறிமுகப்படுத்தினர். அவர்களை பின் தொடர்ந்து தண்ணீரை சேமிக்கவும், ஆட்கள் பற்றாக்குறையை கையாளவும் நுண் தெளிப்பு பாசனம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த தொழில்நுட்பத்தை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண் தெளிப்பான்கள் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் நிலத்தில் விவசாயம் மேற்கொண்டு வர வேண்டும். சிறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு ரூ.30 லட்சம் மதிப்பில் 178 விவசாயிகளுக்கு நுண் தெளிப்பான்கள் வழங்கப்படவுள்ளது." என்றார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...