மாணவர்களுக்கு தொழில் தொடர்பான பயிற்சி அளித்த 'பை தி ஸ்டார்ட்-அப்'

கல்லூரி மாணவர்கள் வருங்கால தொழில் முனைவோர்களாக உருவெடுப்பதற்கான பயிற்சியை 'பை தி ஸ்டார்ட்-அப்' நிறுவனம் வழங்கியது.


கோவை : கல்லூரி மாணவர்கள் வருங்கால தொழில் முனைவோர்களாக உருவெடுப்பதற்கான பயிற்சியை 'பை தி ஸ்டார்ட்-அப்' நிறுவனம் வழங்கியது. 

கோவையை அடித்தளமாகக் கொண்டு 'பை தி ஸ்டார்ட்-அப்' என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. காயத்ரி ராஜேஷ் மற்றும் சமீர் ஆகியோரது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு மூலதனம், பயிற்சி மற்றும் தொழிலை வெற்றிகரமாக நடத்த மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை தொழில் முனைவோருக்கு ஏற்படுத்தித் தருகிறது இந்த நிறுவனம். 



இந்த நிலையில், மதுக்கரை அருகே உள்ள எஸ்.என்.டி. கல்லூரியின் முதுநிலை வணிக நிர்வாக துறை மாணவர்கள் 65 பேருக்கு தொழில் தொடங்குதல் தொடர்பான பயிற்சி மற்றும் ஆலோசனை நேற்று வழங்கப்பட்டது. 'பை தி ஸ்டார்ட்-அப்' நிறுவனம் சார்பில் வெற்றிகரமாக இயங்கி வரும் தொழிற் கூடங்களுக்கு கல்லூரி மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். 

இது குறித்து 'பை தி ஸ்டார்ட்-அப்' நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான சமீர் கூறியதாவது, "கோவை ஸ்டார்ட்-அப் ரவுண்ட் என்ற பெயரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களை வெற்றிகரமாக இயங்கி வரும் நான்கு தொழில் நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்றோம். அங்கு தொழில் முனைவோருடன் மாணவர்கள் நேரடியாக பேசினார்கள். ஒரு தொழிலை எப்படி வெற்றிகரமாக செய்வது? அதற்கான முதலீடுகளை எப்படி திரட்டுவது? போன்ற மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு தொழில் முனைவோர்கள் விளக்கமளித்தனர். இந்த பயிற்சி வரும் காலத்தில் மாணவர்கள் ஒரு வெற்றிகரமான தொழில் முனைவோராக மாற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை." என்றார். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...