நீர்பிடி முகடுப்பகுதி மேலாண்மை குறித்த 3 நாள் கருத்தரங்கு தொடக்கம்

நீலகிரி மாவட்டம் உதகையில் ஒருங்கிணைந்த நீர்பிடி முகடுப்பகுதி மேலாண்மை, வாழ்வாதார மேம்பாடு மற்றும் பண்ணை உற்பத்தி குறித்த மூன்று நாட்கள் கருத்தரங்கு இன்று துவங்கியது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் ஒருங்கிணைந்த நீர்பிடி முகடுப்பகுதி மேலாண்மை, வாழ்வாதார மேம்பாடு மற்றும் பண்ணை உற்பத்தி குறித்த மூன்று நாட்கள் கருத்தரங்கு இன்று துவங்கியது.



இந்திய மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் இப்பயிற்சியை அதன் உதகமண்டல மைய தலைவர் ஓம் பால்சிங் கோலா மற்றும் தோட்டக்கலை துறை மற்றும் மலை பயிர்கள் இணை இயக்குனர் உமா ராணி துவக்கி வைத்தனர். பின்னர், நிகழ்ச்சியில் உமா ராணி பேசுகையில், "இந்நிறுவனம் மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு குறித்த தொழில்நுட்பங்களை உருவாக்கி அவற்றை விவசாயிகளுக்குப் பயிற்சி அளிப்பதில் முன்னோடியாகத் திகழ்கிறது. எனவே, இப்பயிற்சில் கற்றுக்கொண்ட தொழில்நுட்பங்களை விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் செயல்படுத்தி, மற்ற விவசாயிகளுக்கும் எடுத்துரைக்க வேண்டும்," எனக் கேட்டுக்கொண்டார்.



இதனைத் தொடர்ந்து மைய தலைவர் ஓம் பால்சிங் கோலா கூறியதாவது :- அரசு விவசாயிகளின் முன்னேற்றத்திற்காகப் பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அவற்றை விவசாயிகள் ஈடுபாட்டுடன் செயல்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு கூறினார். தொடர்ந்து, இந்நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து பேசிய முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன், ஒருங்கிணைந்த நீர்பிடி முகடுப்பகுதி மேலாண்மையில் விவசாயிகளின் பங்கேற்பின் முக்கியத்துவத்துவம் குறித்தும், மழைநீர் சேகரிப்பு மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களின் மதிப்புக்கூட்டுதலின் அவசியம் குறித்து விளக்கினார்.

இப்பயிற்சியில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்தைச் சேர்ந்த 25 நீர்ப்பிரி பயனாளிகள் கலந்துகொண்டனர். இறுதியில், இந்நிகழ்ச்சியில் நீர்பிடி முகடுப்பகுதி மேலாண்மை குறித்த கையேடு வெளியிடப்பட்டது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...