குரங்கணி தீவிபத்தில் படுகாயமடைந்த இளம்பெண் உயிரிழப்பு : பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

தேனி மாவட்டம் குரங்கணி தீவிபத்தில் படுகாயமடைந்த ஈரோட்டைச் சேர்ந்த இளம்பெண் சிகிச்சை பலினின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணி தீவிபத்தில் படுகாயமடைந்த ஈரோட்டைச் சேர்ந்த இளம்பெண் சிகிச்சை பலினின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

போடி அருகே குரங்கணி காட்டுப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் காட்டுத்தீயில் சிக்கினர். இவர்களில், ஆறு பெண்கள் உட்பட 10 பேர் பலியாகினர். 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாவட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்த திவ்யா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

மதுரை அரசு மருத்துவமனையில் ஆறுதல் கூறிய பின்னர் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "3 பேருக்கு 40 சதவீதத்திற்கு குறைவான காயம் ஏற்பட்டது. 13 பேருக்கு 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க 33 பேர் கொண்ட மருத்துவ குழு செயல்படுகிறது. 74 செவிலியர்கள் சிகிச்சை பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்," எனத் தெரிவித்தார். இந்நிலையில், மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்களைக் கண்காணிக்க தவறியதாக வனவர் ஜெய்சிங் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடேயே, மதுரைக்கு சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...