கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை

மாலத்தீவு அருகே நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதால், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது



மாலத்தீவு அருகே நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதால், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 8-ந்தேதி திடீரென குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்றுக் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் சூறாவளி காற்றும், பலத்த மழையும் பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. 

இந்த நிலையில், இன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- குமரி கடல் பகுதியில் மையம் கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மாலத்தீவு நோக்கி நகர்கிறது. இந்தத் தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளாவின் தென் பகுதியிலும் பலத்த மழை பெய்யுமென்று கூறப்பட்டுள்ளது. இந்த மழை இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை 3 நாட்களுக்குப் பெய்யும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் பலத்த மழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகின்றது. 

குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை :

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் 15-ம் தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம். குறிப்பாக, மாலத்தீவுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...