ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலஅவகாசம் நீடிப்பு

ஆதார் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை ஆதார் கட்டாயம் இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஆதார் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை ஆதார் கட்டாயம் இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. செல்போன் எண்கள், வங்கி கணக்குகள் போன்றவற்றில் பயனாளர்கள் ஆதார் எண்ணை வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முன் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் இன்று இடைக்கால தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், ஆதார் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை ஆதார் கட்டாயம் இல்லை என்று தெரிவித்துள்ளது. அதாவது, வங்கி கணக்கு, செல்போன் எண்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, ஆதார் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீட்டிக்கப்படுவதாக அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...