வரி செலுத்தாத குடியிருப்புகளின் குடிநீர் இணைப்பைத் துண்டித்த மாநகராட்சி

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம் மற்றும் சொத்துவரியை கட்டாத குடியிருப்புகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கோவை : கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம் மற்றும் சொத்துவரியை கட்டாத குடியிருப்புகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். க.விஜயகார்த்திகேயன் உத்தரவின்படி, கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண் 83-க்குட்பட்ட இராஜ வீதியிலுள்ள திரு.கே.ஐ.எட்வினின் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம் மொத்தம் ரூ. 16,845ஐ செலுத்தாத காரணத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும், வார்டு எண் 25-க்குட்பட்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உரிமைதாரர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் மொத்தம் ரூ. 27,796 இதுவரை செலுத்தாத காரணத்தினால் இன்று குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எனவே, பொதுமக்கள் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பைத் துண்டிப்பதை தவிர்க்குமாறு மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...