ஸ்டீபன் ஹாக்கிங் புகழ் என்றும் உலகில் நிலைத்து நிற்கும் : கமல்

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தாலும் அவரின் புகழ் உலகில் நிலைத்திருக்கும் என நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தாலும் அவரின் புகழ் உலகில் நிலைத்திருக்கும் என நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலை மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு உலகின் பல தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், அவரது மரணத்திற்கு நடிகர் கமல்ஹாசன் மற்றும் பா.ஜ.க., தேசிய தலைவர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளனர். 

'திரு. ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் நம்மிடை வாழ்ந்ததில் பெருமை கொள்வர் உலக மக்கள். அவர் நமக்களித்த ஞான தானத்தை என்றும் நினைவில் கொள்வோம். அவர் புகழ் வாழும்' என நடிகர் கமல்ஹாசன் டுவிட் செய்துள்ளார்.

'ஸ்டீபன் ஹாக்கிங் மிகச்சிறந்த மனிதர். அவரின் இழப்பு பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய அறிவு மனித இனத்தின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையாக அமையும். இந்த உலகைப்பற்றி அறிந்து கொள்ள அவரின் ஆராய்ச்சி நமக்கு உதவியாக இருந்தது. அவரின் புகழ் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் நிலைத்திருக்கும். ஸ்டீபனின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்' என பா.ஜ.க தலைவர் அமித் ஷா டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...