தமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் இல்லை: மானியம், உதவித்தொகைக்கு ரூ. 75,723 கோடி ஒதுக்கீடு

தமிழக அரசின் மானியம் மற்றும் பல்வேறு உதவித் தொகைகள் வழங்குவதற்காக இந்த நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ. 75,723 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மானியம் மற்றும் பல்வேறு உதவித் தொகைகள் வழங்குவதற்காக இந்த நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ. 75,723 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழக சட்டசபையில் இன்று 2018-19-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. பட்ஜெட்டை தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- தமிழக அரசின் வருவாய் ரூ.1.81 லட்சம் கோடியாகவும், செலவு ரூ. 2.04 லட்சம் கோடியாகவும் உள்ளது. பற்றாக்குறை ரூ. 23,176 கோடியாக உள்ளது. ஆயத்தீர்வைகளின் மூலம் அரசுக்கு ரூ. 6,998 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.

மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக ரூ. 786 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வடசென்னை மாவட்டத்துக்கான வெள்ள தடுப்பு மேலாண்மை ரூ. 3,243 கோடியில் திட்டம் தயாரிக்கப்படும். காவல்துறைக்கு ரூ. 7,877 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மானியம் மற்றும் உதவித்தொகைகளுக்கான ஒதுக்கீடு ரூ. 75,723 கோடியாக இருக்கும். ஓய்வூதியம், இதர ஓய்வுகால பலன்களுக்கு ரூ. 25,362 கோடி, சம்பள செலவினங்களுக்கு ரூ. 52,171 கோடி, தீயணைப்பு, மீட்பு பணிகள் துறைக்கு ரூ. 347.59 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார். 

தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

வருவாய் துறைக்கு 6.144 கோடி 

குடிமராமத்து பணிகளுக்கு ரூ.300 கோடி

நெடுஞ்சாலை துறைக்கு ரூ. 11,073.66 கோடி

பள்ளி கல்விதுறைக்கு ரூ.27.205.88 கோடி

பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333.36 கோடி

உயர்கல்வி துறைக்கு ரூ.4620 .20 கோடி

ரயில்வே பணிகள் திட்டத்திற்கு ரூ.513.66 கோடி

வறுமை ஒழிப்பு ரூ.519.81 கோடி ஒதுக்கீடு

மகளிர் திருமண உதவி திட்டத்திற்கு ரூ.724 கோடி

ஜெ., வீட்டை நினைவிடமாக்க ரூ.20 கோடி

தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு ரூ. 347.59 கோடி 

பேரிடர் நிவாரண நிதியத்திற்கு ரூ. 786 கோடி

காவல்துறைக்கு ரூ. 7,877 கோடி ஒதுக்கீடு

மானிய டூவிலர் திட்டத்திற்கு ரூ. 250 கோடி

மகளிர் சுகாதார திட்டத்தில் நாப்கின் வழங்க ரூ. 60.58 கோடி

சுகாதார துறைக்கு ரூ. 11,638.44 கோடி 

உள்ளாட்சி தேர்தல் நடந்த ரூ. 172 கோடி

வேளாண்மை துறைக்கு ரூ. 8916 கோடி

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ. 972.86 கோடி

தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ. 1,074 கோடி

இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ. 191.18 கோடி

உள்ளாட்சிதுறைக்கு ரூ. 17,869 கோடி

குடிநீர் திட்டங்களுக்கு ரூ. 1,853 கோடி

முதல்வரின் காப்பீடு திட்டத்திற்கு ரூ. 1,361.60 கோடி

அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ரூ. 1,789 கோடி

பழங்குடியினர் நலனுக்கு ரூ. 333.82 கோடி

முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ரூ. 1,336 கோடி

இலவச சைக்கிள் திட்டத்திற்கு ரூ. 71.01 கோடி

பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க ரூ. 758 கோடி

கட்டாய கல்வி திட்டத்தை செயல்படுத்த ரூ. 200.70 கோடி

சத்துணவு திட்டத்திற்கு ரூ.1,747 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...