சீரமைக்காத சாலையை சொந்த செலவில் சீரமைக்கும் கிராம மக்கள்

நீலகிரி மாவட்டத்தில் நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், சீரமைக்காத சாலையை சொந்த செலவில் கிராம மக்கள் சீரமைத்து வருகின்றனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், சீரமைக்காத சாலையை சொந்த செலவில் கிராம மக்கள் சீரமைத்து வருகின்றனர். 



உதகையை அடுத்த கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட அட்டுகொலை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு இவர்கள் உதகை, குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சிறிய சாலை மூலம் சென்று வந்தனர். பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த சாலையின் வழியாக தான் செல்ல வேண்டும். மேலும், இவர்கள் இறந்தவர்களின் உடல்களை இந்த சாலை வழியாகத் தான் எடுத்து செல்ல வேண்டும். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழையால் இந்த சாலை முற்றிலும் சேதமடைந்தது. 

இதனைத் தொடர்ந்து, சாலையை சீரமைக்கக் கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் கேத்தி பேரூராட்சியில் இப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தனர். விரைவில் சாலை சீரமைக்கப்படும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் சாலை சேதமடைந்து 2 ஆண்டு காலமாகி இதுவரையும் இந்த சாலையை சீரமைப்பதற்கான எந்தவிதமான பணிகளையும் மேற்கொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு வந்தனர். இதனால், இக்கிராம மக்கள் கடும் அதிருப்தியடைந்தனர். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் இறந்தவரின் உடலை இந்த சாலை வழியாக எடுத்து வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதேபோல, அவசர சிகிச்சைக்காக எந்தவிதமான வாகனங்களை இந்த சாலையில் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



இதனையடுத்து, அரசின் உதவியை எதிர்பாராமல், தாங்களே சொந்த செலவில் சாலையை சீரமைப்போம் என முடிவெடுத்து அக்கிராம மக்கள் நிதியை திரட்டியுள்ளனர். இந்த நிதியைக் கொண்டு இன்று சேதமடைந்த சாலையை சிமெண்ட் சாலையாக மாற்றும் பணியை தொடங்கியுள்ளனர். இவர்கள் சாலையை சீரமைக்கும் பணியை கண்ட அதிகாரிகள் சாலை சீரமைப்பை நிறுத்துமாறு கேட்டுள்ளனர். சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கான உத்தரவு கேத்தி பேரூராட்சியில் இருக்கிறது என கூறியுள்ளனர். ஆனால், கேத்தி பேரூராட்சியில் இந்த சாலையை சீரமைக்க நிதி வழங்கப்படவில்லை என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இவர்கள் மீண்டும் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...