அறநிலையத்துறையைக் கண்டித்து அனைத்து கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்

திருப்பூரில் கோவில் இடம் எனக் கூறி குடியிருப்புகளை அகற்றக் கோரிய அறநிலையத் துறையினை கண்டித்து பொதுமக்கள் மற்றும் அனைத்துக்கட்சியின் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூரில் கோவில் இடம் எனக் கூறி குடியிருப்புகளை அகற்றக் கோரிய அறநிலையத் துறையினை கண்டித்து பொதுமக்கள் மற்றும் அனைத்துக்கட்சியின் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மங்களம் சாலையில் உள்ள கருவம்பாளையம், பாரப்பாளையம் ஆகிய இடங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதிகள் கோவில் இடம் எனக் கூறி, அங்குள்ளவர்களை உடனடியாக காலி செய்ய வலியுறுத்தி அறநிலையத்துறை சார்பில் கடந்த மாதம் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் பெற்றுக் குடியிருப்புகளை கட்டியுள்ள தங்களை, கோவில் இடம் எனக்கூறி காலி செய்ய சொல்வதாகவும், தங்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அறநிலையத்துறையின் முடிவை வாபஸ் பெற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் மனு அளித்திருந்தனர். 

இந்த நிலையில், அந்த மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தி.மு.க., கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சியினர் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கருவம்பாளையம் பகுதியில் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்காவிட்டால் இனி தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...