காதல் மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை

கோவையில் கடந்த 2017-ம் ஆண்டு காதல் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை: கோவையில் கடந்த 2017-ம் ஆண்டு காதல் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

சிறுமுகை பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் மகன் உதயகுமார் (23). தனது தங்கையின் தோழியான அதே பகுதியை சேர்ந்த ஆனந்தியை கடந்த 2016-ம் ஆண்டு சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் வைத்து காதல் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பின்னர் குடும்ப செலவிற்கு பணம் தராமல் குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கூறியும், அதனை மறுத்த ஆனந்தியை கொலை செய்யும் முயற்சியும் நடந்துள்ளது. 

இதனிடையே, தனியாக வசித்து வந்த உதயக்குமார் கடந்த 2017-ம் ஆண்டு சிறுமுகை அருகே பேருந்தில் வைத்து மனைவி ஆனந்தியை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, உதயக்குமாரை கைது செய்த மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை முடிவுற்ற நிலையில், குற்றவாளி உதயகுமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1000 அபராதம் விதித்து கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...