உதகையில் குதிரை பந்தய மைதானத்தை சீரமைக்கும் பணி தீவிரம்

கோடை சீசனை முன்னிட்டு உதகை குதிரை பந்தய மைதானத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி : கோடை சீசனை முன்னிட்டு உதகை குதிரை பந்தய மைதானத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது அவர்களின் சிறந்த சுற்றுலாத்தலமாக உதகை விளங்கியது. அவர்களே அங்கு குதிரை பந்தயத்தை ஆரம்பித்தனர். அன்று முதல், ஆண்டு தோறும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று உதகையில் குதிரை பந்தயம் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை மொத்தம் 30 நாட்கள் இந்த குதிரை பந்தயம் நடைபெறும். இதில் நீலகிரி டர்பி, நீலகிரி தங்க கோப்பை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. கோடை காலத்தில் நடைபெறும் இந்த குதிரை பந்தயத்தை உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்துச் செல்வார்கள்.



அதன்படி, நடப்பு ஆண்டு கோடை கால சீசனை முன்னிட்டு நடைபெற இருக்கும் குதிரை பந்தயத்திற்காக உதகை குதிரை பந்தய மைதானத்தை சீரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. குதிரைகள் ஓடு தளத்தில் உள்ள பசுமையான புற்கள் சமமான அளவில் வெட்டப்பட்டு, அவற்றிற்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வளர்க்கப்படுகிறது. 

இந்த குதிரை பந்தயத்தில் சென்னை, பெங்களூர் மற்றும் மும்பை போன்ற பல்வேறு நகரங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்க உள்ளன. குதிரைகள் மற்றும் அதன் பராமரிப்பாளர்கள் தங்குவதற்காக கொட்டகைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. குதிரை பந்தய மைதானத்தை முற்றிலும் கண்காணிக்க வசதியாக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. மைதானத்தில் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கு வசதியாக உள்ள இருக்கைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவடைந்ததும் இம்மாதம் இறுதியில் உதகைக்கு குதிரைகள் வரத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...