பணியின் போது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிய இ.எஸ்.ஐ.

தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கும் பொழுது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இ.எஸ்.ஐ கிளை அலுவலகம் சார்பில் மாதாந்திர உதவி தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

கோவை: தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கும் பொழுது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இ.எஸ்.ஐ கிளை அலுவலகம் சார்பில் மாதாந்திர உதவி தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

கோவையைச் சேர்ந்த ஞானபிரபு என்பவர் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஆரோக்கிய மேரி (36) என்ற மனைவியும், லூர்து ஜெரோம் (15) என்ற மகனும், மெர்லின் ஜோய்ஸ்(14) என்ற மகளும் உள்ளனர். இவர் பணிபுரியும் நிறுவனமானது இ.எஸ்.ஐ. நிறுவனத்தில் பதிவு செய்து அவருக்கான சந்தா தொகையினை செலுத்தி வந்தது. 

இந்த நிலையில், ஞானபிரபு கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பணியில் இருக்கும் போது திடீரென உயிர் இழந்தார். இதில் இ.எஸ்.ஐ. நிறுவனம் விசாரணை மேற்கொண்டது. 

விசாரணை முடிவடைந்த நிலையில் அவரின் குடும்பத்திற்கு மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணை மற்றும் நிலுவை தொகை வழங்க இ.எஸ்.ஐ. நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, அந்நிறுவனத்தின் துடியலூர் கிளை மேலாளர் கோவிந்தராஜ் ரூ.2,19,450-ஐ உயிரிழந்த ஞானபிரபுவின் குடும்பத்திற்கு வழங்கினார்.

இதன் மூலம் அக்குடும்பத்திற்கு மாதந்தோறும் ரூ.12,000 வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...