கால்நடை தீவன 4-வது வழக்கு: லாலு பிரசாத் குற்றவாளி என அறிவிப்பு

கால்நடை தீவன 4-வது ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கால்நடை தீவன 4-வது ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

பீகார் முதலமைச்சராக இருந்த லாலுபிரசாத் யாதவ் கால்நடை தீவன முறைகேட்டில் சிக்கினார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டது. இதில், 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. முதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2-வது வழக்கில் 3½ ஆண்டுகளும், 3-வது வழக்கில் 15 ஆண்டும் லாலுவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து, ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட லாலு, தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், லாலு பிரசாத் யாதவ் மீதான தும்சா கருவூலத்தில் இருந்து ரூ. 3.13 கோடி ஊழல் புரிந்தது தொடர்பான 4-வது வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, லாலுபிரசாத் யாதவ் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேலும், 13 பேர் குற்றவாளிகள் எனவும், இவர்களுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், முன்னாள் முதலமைச்சர் ஜெகந்நாத் மிஸ்ரா உள்பட 5 பேர் விடுவிக்கப்பட்டனர். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...