பயனற்று கிடைக்கும் படிப்பகத்தை திறக்ககோரி மனு

இரண்டு வருடங்களாக பயனற்று கிடைக்கும் படிப்பகத்தை திறக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தலையில் புத்தகத்தை சுமந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: இரண்டு வருடங்களாக பயனற்று கிடைக்கும் படிப்பகத்தை திறக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தலையில் புத்தகத்தை சுமந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலணி 76-வது வார்டு பகுதியில் கடந்த 2016-ல் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் நூலகம் அமைக்கப்பட்டது.

இந்த நூலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை மனு அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குற்றம் சாடினர்.

மேலும், இதனைக் கண்டிக்கும் வகையில் தலையில் புத்தகத்தைச் சுமந்த படி வந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், "மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்காக கட்டப்பட்ட படிப்பகத்தை திறக்க காலம் கடத்துவது வேதனை அளிக்கிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில் பொது மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு உடனடியாக படிப்பகத்தை திறக்க கோரி மனு அளித்துள்ளோம். படிப்பகத்தை திறப்பதில் கால தாமதம் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்." என்றனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...