கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோலில் வருகிறார் சசிகலா

உடல்நலக் குறைவால் காலமான தனது கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா 15 நாள் பரோலில் இன்று வருகிறார்.

உடல்நலக் குறைவால் காலமான தனது கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா 15 நாள் பரோலில் இன்று வருகிறார்.

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம. நடராசன், உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது உடல் எம்பார்மிங் செய்யப்பட்டு சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. நடராசன், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே, சசிகலாவை பரோலில் எடுக்க தினகரன் உள்ளிட்டோர் முயன்று வந்தனர். அதற்காக நேற்று, சிறை நிர்வாகத்திடம் பரோல் கோரி மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

ஏற்கெனவே, கடந்த அக்டோபர் மாதம் பரோல் வழங்கியநிலையில், மீண்டும் வழங்க சிறை நிர்வாகம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது நடராசன் மரணமடைந்துள்ளதால், அவருக்கு பரோல் வழங்க வேண்டும். இதற்கிடையே, நடராசன் இறப்புச் சான்றிதழ் கிடைத்த ஒரு மணி நேரத்தில் பரோல் கிடைக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சசிகலா இன்று பரோலில் வருவார் எனத் தெரிகிறது.

பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் 15 கேட்கிறார் சசிகலா என தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 08.30 மணிக்கு சசிகலாவின் வழக்கறிஞர்கள் பரோல் மனுவில் சசிகலாவிடம் கையெழுத்து பெறப்பட்டதாகவும், பரோல் மனுவோடு நடராஜனின் இறப்பு சான்றிதழும் இணைத்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். பரோல் மனு கிடைத்தவுடன் பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் பரோல் வழங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறை விதிகளின் படி, வழக்கமான உடல் பரிசோதனை மற்றும் சிறை நடைமுறைகளுக்கு பிறகு சசிகலா வெளியில் வருவார் என தெரியவந்துள்ளது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...