சிட்டுக் குருவிகளை பாதுகாக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்

ஆண்டு தோறும் மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக் குருவிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி: ஆண்டு தோறும் மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக் குருவிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சிட்டுக் குருவிகள் மனிதர்களோடு ஒன்றி வாழ்பவை. மனித இனம் தனது வாழ்க்கைச் சூழலை மாற்றியமைத்து வருவதாலேயே அந்த இனங்கள் அழிந்து வருவதாக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், செல்போன் டவர்களால் சிட்டுக் குருவிகள் அழிந்து வருகிறது என்பது வதந்தி என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.



இந்த சூழலில், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிட்டுக் குருவிகளுக்கென தனி இருப்பிடம் அமைத்து அவற்றைப் பாதுகாத்து வருகின்றனர். 

கூடு

உதகை ஐந்து லாந்தர் என்ற இடத்தில் உள்ள ஆட்டோ நிறுத்தம் ஒன்றில் பத்து வருடங்களுக்கு முன் அங்கிருந்த சில ஆட்டோ ஓட்டுநர்கள் சிட்டுக் குருவிகளை பாதுகாக்கும் பொருட்டு மரம் ஒன்றை நட்டு வைத்து அதில் சிட்டு குருவிகள் தங்க வசதியாக மண்பானைகளைக் கொண்டு கூண்டுகளை அமைத்துள்ளனர். 



அவர்களின் முயற்சிக்கு சில நாட்களிலேயே நல்ல பலன் கிடைக்க ஆரம்பித்தது. சில நாட்களிலேயே அந்த மரத்தில் சிட்டுக் குருவிகள் வந்து வாழ தொடங்கியது. 10 ஆண்டு கால தொடர் முயற்சியின் காரணமாக தற்போது அந்த மரத்தில் நூற்றுக்கணக்கான சிட்டு குருவிகள் வாழ்ந்து வருகின்றன. ஆட்டோ ஓட்டுநர்களின் இந்த முயற்சியை பலர் பாராட்டி வருகின்றனர். 

இதுகுறித்து தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் கூறுகையில், "அன்றைய காலங்களில் வீட்டின் கூரைகள் மீது தூவப்பட்டும் சிறு தானியங்கள், வயல் வெளிகளில் கிடைக்கும் உணவுகளைக் கொண்டு சிட்டுக்குருவிகள் வாழ்ந்து வந்தன. தற்போது நகரமயமாதல் காரணமாக கூரை வீடுகளுக்கு பதிலாக கான்கீரிட் கட்டிடங்கள் பெருகிவிட்டன. இதனால் அவற்றின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதுவே, தற்போது சிட்டுக் குருவிகள் அழிந்து வருவதற்கு காரணமாக உள்ளது." என்றார். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...