தொடரும் போராட்டத்தால் வெறிச்சோடிக் காட்சியளிக்கும் திரையரங்குகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று சந்தித்து பேசிய நிலையிலும், திரையரங்குகளின் வேலை நிறுத்தம் இன்றும் தொடர்ந்து வருகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று சந்தித்து பேசிய நிலையிலும், திரையரங்குகளின் வேலை நிறுத்தம் இன்றும் தொடர்ந்து வருகிறது. 

கேளிக்கை வரியை ரத்து செய்யக் கோரி சென்னையைத் தவிர தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கடந்த 16-ம் தேதியில் இருந்து திரையரங்குகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர். சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவும் உடனிருந்தார். தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரி 8 சதவீதத்தை முழுவதுமாக நீக்க வேண்டும், வருடத்துக்கு ஒருமுறை உரிமத்தைப் புதுப்பிக்கும் முறையை மாற்றி 3 வருடத்துக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும் எனக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், “இன்னும் இரண்டு நாட்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தனது முடிவை அறிவிப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பேரவைக் கூட்டம் நடைபெற்று வருவதால் இரண்டு நாட்கள் பொறுமையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். எனவே, வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, இன்றும் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மயானம் போல காட்சியளித்தன.



Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...