சிறுவாணி அருகே அனுமதியின்றி மரம் வெட்ட முயற்சி

கோவையில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அனுமதியின்றி மரம் வெட்ட முயற்சித்தவர்களை சூழலியல் ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தினர்.

கோவை: கோவையில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அனுமதியின்றி மரம் வெட்ட முயற்சித்தவர்களை சூழலியல் ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தினர். 

சிறுவாணி சாலையில் உள்ள காருண்யா நகர் பகுதியில் 75 வயது பழமையான மரம் உள்ளது. சாலை விரிவாக்க பணிகளுக்காக அந்த மரத்தை வெட்டுவதாக கோவையை சேர்ந்த ஓசை தன்னார்வ அமைப்புக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.



இது குறித்து ஓசை அமைப்பைச் சேர்ந்த சையது கூறுகையில், "சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டிருக்கும் ஒப்பந்ததாரர் வருவாய்த் துறையினரின் அனுமதியின்றி மரங்களை வெட்டுவதாக தகவல் கிடைத்தது. அதன்படி, வருவாய் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் மரம் வெட்டும் முயற்சி தடுக்கப்பட்டது. அந்த சாலைக்கு கோவை குற்றாலத்திற்கு மட்டுமே வாகனங்கள் செல்கின்றன. எனவே, அந்த மரத்தை வெட்டி சாலையை அகலப்படுத்தும் தேவை இல்லை".



Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...