காவிரி விவகாரம் : உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த 4 மாநிலங்களும் ஒப்புதல்

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக செயல்படுத்த 4 மாநிலங்களும் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக செயல்படுத்த 4 மாநிலங்களும் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு 6 வார காலம் அவகாசம் அளித்து கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவில் 5 வாரங்கள் முடிந்துவிட்டன. ஆனால், மத்திய அரசு இன்னும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம்தாழ்த்தி வருகிறது.

இந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரி மேலாண்மை வாரியம் வருகிற 30-ந் தேதிக்குள் அமைக்கப்பட வாய்ப்பு இல்லை. இது தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எழுத்துப்பூர்வமான கருத்துகளை தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை கேட்டுக் கொண்டு இருக்கிறோம். உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. ஒரு திட்டத்தை உருவாக்கவேண்டும் என்று தான் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சரியான தீர்வாக அமையும் திட்டத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது, எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்பி வேணுகோபால் கேள்விக்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சகம், காவிரி தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை முழுமையாக செயல்படுத்துவது என தமிழகம், கர்நாடக, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் ஒத்துக்கொண்டுள்ளன. 4 மாநிலங்களுடனான ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது, இவ்வாறு கூறப்பட்டது. 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...