குரங்கணி தீ விபத்தில் சிக்கிய மேலும் இரண்டு பெண்கள் பலி

குரங்கணி தீ விபத்தில் படுகாயமடைந்து மதுரையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.

கோவை: குரங்கணி தீ விபத்தில் படுகாயமடைந்து மதுரையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த 11-ம் தேதி ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 17 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்த தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களுக்கு மதுரை, தேனி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தீ விபத்தில் சிக்கிய கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயஸ்ரீ (32) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார்.

தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சையை சேர்ந்த சாய் வசுமதி என்ற பெண்ணும், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னையை சேர்ந்த நிவ்ய நிக்ருதி என்ற பெண்ணும் சிகிச்சை பலனின்றி இன்று பலியாகினர்.

இதுவரை குரங்கணி தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...