காவல்நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு

திருப்பூரில் இடப்பிரச்சனை காரணமாக காவல்நிலையம் முன்பு ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

திருப்பூர்: திருப்பூரில் இடப்பிரச்சனை காரணமாக காவல்நிலையம் முன்பு ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 



 

திருப்பூர் ஜே.ஜே நகர் பகுதியைச் சேர்ந்த சூர்யகுமார். இவருக்கு அதே பகுதியில் சொந்தமான 4 சென்ட் இடம் இருந்துள்ளது. இந்நிலையில், இவர் வீடு கட்டுவதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரிடம் வீட்டின் பத்திரத்தை கிரைய ஒப்பந்தம் செய்து ரூ. 7.5 லட்சம் பணம் பெற்றுள்ளார். சுமார் இரண்டு வருடகாலமாக வட்டி தொகை கட்டாத காரணத்தால், சூர்யகுமாரின் இடத்தை தெய்வசிகாமணி தனது பெயருக்கு மாற்றியுள்ளார். இதையறிந்த சூர்யகுமார் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இது குறித்து வீரபாண்டி காவல்நிலையத்தில் பல முறை புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.



இதனால், மனமுடைந்த சூர்யகுமார், இன்று திருப்பூர் வீரபாண்டி காவல்நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார். இதைக்கண்ட போலீசார் அவரை மீட்டு காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...