கவுரவ விரிவுரையாளரின் சான்றிழ்கள் வாட்ஸ்அப்பில் பரப்பிய விவகாரம் : கல்வித்துறை தலையிட வலியுறுத்தல்

உதகை அரசு கலைக் கல்லூரியில் பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளரின் சான்றிதழ்கள் போலி என வாட்ஸ்அப்பில் பரவச் செய்த விவகாரம் தொடர்பாக கல்வித்துறை தலையிட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளார்.


உதகை : உதகை அரசு கலைக் கல்லூரியில் பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளரின் சான்றிதழ்கள் போலி என வாட்ஸ்அப்பில் பரவச் செய்த விவகாரம் தொடர்பாக கல்வித்துறை தலையிட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

உதகை அரசு கலைக் கல்லூரியில் தாவரவியல் துறையில் கவுரவ விரிவுரையாளர்களாகப் பணிபுரியும் பேராசிரியரின் சான்றிதழ்களின் நகல்களை, நிரந்தர பேராசிரியர் ஒருவர் கல்லூரி வாட்ஸ்அப் குழுவில் அவை போலியானவை என அவதூறு பரப்பி வருவதாக கவரவ விரிவுரையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



இது குறித்து கவுரவ விரிவுரையாளர் கூறுகையில், "உதகை அரசு கலைக் கல்லூரியில் தாவரவியல் துறையில் கவுரவ விரிவுரையாளரின் பணிக்கான நேர்காணலின் போது சான்றிதழ்கள் சரிபார்க்க கொடுக்கப்பட்டது. அவ்வாறு கொடுக்கப்பட்ட சான்றிதழ்களை எடுத்து வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டுள்ளனர். தன்னைக் கேவலப்படுத்தும் வகையில் எனது சான்றிதழ்களை வாட்ஸ் அப்பில் பதிவு செய்தது மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். சம்பந்தப்பட்டத் துறை மற்றும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகமும், கல்லூரி இயக்கமும் இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பேராசியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்றார். 

இந்த விவகாரத்தின் மூலம் உதகை அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் கவுரவ விரிவுரையாளர்களிடையே பனிப்போர் வெடித்துள்ளது. இதனால், கல்லூரி மாணவ, மாணவிகளிடையே கல்வி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இவ்விவகாரத்தில் உடனடியாக தீர்வு காணவேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கும், உயர்கல்வித்துறைக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...