காட்டு தீ குறித்த சாட்டிலைட் தகவல்களை அனுப்ப உத்தரவு: குரங்கணி தீவிபத்து போன்று நிகழாமல் இருக்க நடவடிக்கை

குரங்கணி காட்டுத் தீயைப் போன்ற கோர சம்பவம் இனி நிகழாமல் இருக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீ குறித்த சாட்டிலைட் தகவல்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.


குரங்கணி காட்டுத் தீயைப் போன்ற கோர சம்பவம் இனி நிகழாமல் இருக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீ குறித்த சாட்டிலைட் தகவல்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வறட்சி, வெப்பம் காரணமாக வனப்பகுதியில் அடிக்கடி தீவிபத்து ஏற்படுகிறது. வனப்பகுதிகளில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை மேய்ச்சலுக்குச் செல்பவர்கள், வன விளைபொருட்களை சேகரிக்க செல்பவர்களின் அலட்சியத்தாலும், வனவிலங்கு வேட்டைக் கும்பல்களின் சூழ்ச்சியின் காரணமாகவும் வனப் பகுதிகளில் தீ விபத்து ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு ஏற்படும் காட்டுத் தீயைக் கண்காணிக்க, சென்னையில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அலுவலகத்தில் சாட்டிலைட் உதவியுடன் செயல்படும் கட்டுப்பாடு, கண்காணிப்பு அறை உள்ளது.

தமிழகத்தில் மொத்த நிலப்பரப்பில் 23 சதவீதம் வனமாக இருக்கிறது. இதில், பசுமை மாறாத வனமாக 3 சதவீத பகுதியிலும், மிதமான பசுமை கொண்ட வனமாக 9 சதவீத பகுதியும் இருக்கிறது. இந்த வனப்பகுதி கடந்த ஆண்டில் மாநில அளவில் வனப்பகுதிகளில் 114 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. ஆனால், நடப்பாண்டில் தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 20 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இது போன்ற கோர சம்பவம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், காட்டுத் தீ பரவினால் சாட்டிலைட்டில் பதிவாகும் தகவலை சம்பந்தப்பட்ட மாவட்ட வனஅலுவலகத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், " கடல் மட்ட உயர கணக்கின் படியும், புவியியல் தகவல் அடிப்படையிலும் பதிவாகும் தகவல்களை உடனடியாக அனுப்ப வேண்டும். அந்த இடத்தில் தீ எவ்வளவு நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டது, தீயில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்களை விரைந்து சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடைக்காலம் முடியும் வரை மாநில அளவில் வனப்பகுதியில் காட்டு தீயைக் கண்காணிக்க ரோந்து குழு அமைத்துக் கண்காணிக்க வேண்டும். வனத்தில் புகை மூட்டம் காணப்பட்டால் தீ தடுப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல வேண்டும். வனத்தில் அபாயம் உள்ள இடங்களில் மக்களை அனுமதிக்கக் கூடாது. கோயில் வனம், சுற்றுலா வனங்களில் வனத்துறையினர் அனுமதி பெற்ற பின்னரே, பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். மக்கள் சென்று வரும் வனப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், காட்டுத் தீயை கண்காணிக்கவும், உயிர்ச்சூழல் பாதுகாக்கவும் உதவும்", என்றார்.

காட்டுத் தீ பரவினால் சாட்டிலைட்டில் பதிவாகும் தகவலை சம்பந்தப்பட்ட மாவட்ட வனஅலுவலகத்திற்கு அனுப்பும் இந்த திட்டம் வரவேற்கத்தக்க வகையில் இருந்தாலும், இதுபோன்ற திட்டங்கள் முன்னரே செயல்படுத்தப்பட்டிருந்ததால், குரங்கணி காட்டுத்தீயில் சிக்கிய 20 பேரின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும்.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...