'பா.ஜ.க வினர் அவதூறாக பேசுகின்றனர்' : தி.மு.க. மகளிர் அணியினர் கோவையில் புகார்

தி.மு.க. மகளிர் அணியினை சேர்ந்தவர்களை சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க.வினர் அவதூறாக பேசுவதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி கோவை மாநகர காவல் ஆணையரிடத்தில் இன்று தி.மு.க.வினர் புகார் மனு அளித்தனர்


கோவை: தி.மு.க. மகளிர் அணியினை சேர்ந்தவர்களை சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க.வினர் அவதூறாக பேசுவதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி கோவை மாநகர காவல் ஆணையரிடத்தில் இன்று தி.மு.க.வினர் புகார் மனு அளித்தனர்.



கடந்த 21-ம் தேதி பாரதிய ஜனதா கட்சி சார்பாக தமிழ்நாட்டிற்குள் ரத ஊர்வலம் வருவதை எதிர்த்து போராடிய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல்களில் ஈடுபட்டனர். 

கோவை மாவட்டத்தில் தி.மு.க. மகளிர் அணியினர் போராட்டத்தோடு, அந்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டனர். இதற்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த ரமா, ஜெகதீசன் என்ற இருவரும் புகைப்படத்தில் இருந்த பெண்களை  விமர்சித்துள்ளனர். இதையடுத்து பெண்களை அவதூறாக விமர்சணம்  செய்த இருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க. மகளிர் அணியினர் இன்று கோவை மாநகர ஆணையரிடம் புகார் அளித்தனர், முகநூலில் அவதூறாக பதிவிட்டிருக்கும் நகலையும் இணைத்து கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யாவிடம் புகார் அளித்துள்ளனர்.



தொடர்ந்து, அக்கட்சி மகளிர் அணியின் மாநில துணை செயலாளர் மீனா லோகநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஸ்டாலின் அவர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டதை கண்டித்து எங்களது மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். அந்த புகைப்படத்தை எனது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தேன். அதற்கு பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த ரமா என்ற பெயரில் உள்ள நபர் மிகவும் தரம் தாழ்த்தி விமர்சனங்களை பதிவிட்டுள்ளார். இது போராட்டங்களில் கலந்து கொள்ளும் பெண்களை இழிவுபடுத்தியுள்ளது. இதனால் ரமா மற்றும் ஜெகன் குமார் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...